Sunday, February 21, 2021

விஜயநகர், பாமினி அரசுகள் Online Test 7th Social Science Lesson 9 Questions in Tamil

 

விஜயநகர், பாமினி அரசுகள் Online Test 7th Social Science Lesson 9 Questions in Tamil

Question 1
__________நூற்றாண்டில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழல், தென்பகுதிகளில் பல புதிய அரசுகள் உதயமாவதற்கான சிறந்த வாய்ப்புகளை அளித்தது.
A
13
B
14
C
15
D
16
Question 2
_________ன் அடக்குமுறை நடவடிக்கைகள் புதிய சுதந்திர அரசுகள் தோன்றுவதற்கு இட்டுச்சென்றன.
A
அலாவுதீன் கில்ஜி
B
குத்புதீன் ஐபக்
C
முகமது பின் துக்ளக்
D
பால்பன்
Question 3
பதினெட்டு முடியரசர்களால் ஆளப்பட்ட பாமினி அரசு எத்தனை ஆண்டுகள் நீடித்தது?
A
120 ஆண்டுகள்
B
150 ஆண்டுகள்
C
180 ஆண்டுகள்
D
200 ஆண்டுகள்
Question 4
பதினாறாம் நூற்றாண்டில் சரிந்த பாமினி அரசு எத்தனை சுல்தானியங்களாக பிரிந்தது?
A
3
B
4
C
5
D
6
Question 5
விஜயநகர அரசு வலுவான அரசாக _________ ஆண்டுகள் கோலோச்சியது.
A
150
B
180
C
200
D
250
Question 6
தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு ________.
A
1656
B
1565
C
1575
D
1545
Question 7
ஹரிஹரர், புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் __________ன் தென்பகுதியில் விஜயநகரம் நிறுவப்பட்டது.
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகா
C
ஆந்திரா
D
மத்திய பிரதேசம்
Question 8
சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
சங்கம் - துளுவ – ஆரவீடு - சாளுவ
B
சங்கம - சாளுவ – ஆரவீடு – துளுவ
C
சங்கம - சாளுவ – துளுவ – ஆரவீடு
D
சாளுவ – சங்கம - துளுவ – ஆரவீடு
Question 9
விஜயநகர அரசர்கள், பாமினி சுல்தான்கள், ஒடிசாவைச் சேர்ந்த அரசர்களுக்கிடையே மோதல்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது__________.
  1. கிருஷ்ணா-துங்கபத்ரா நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி
  2. கங்கை-யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட செழிப்பான பகுதி
  3. கிருஷ்ணா - கோதாவரி நதிகளுக்கு இடைப்பட்ட கழிமுகப்பகுதி
A
1, 2
B
2, 3
C
1, 3
D
எதுவுமில்லை
Question 10
விஜயநகர் அரசு உருவாகி __________ ஆண்டுகளுக்கு பிறகு பாமினி அரசு நிறுவப்பட்டது.
A
5
B
7
C
9
D
10
Question 11
__________ என்பவர் மதுரை சுல்தானியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு அங்கு ஒரு நாயக்க அரசை நிறுவுவதிலும் வெற்றி பெற்றார்.
A
ஹரிஹரர்
B
முதலாம் புக்கர்
C
குமார கம்பணா
D
கங்காதேவி
Question 12
மதுரா விஜயம் என்ற நூலை இயற்றியவர் யார்?
A
குமார கம்பணா
B
கங்காதேவி
C
சதாசிவராயர்
D
திருமலைதேவராயர்
Question 13
பெல்காம், கோவா ஆகிய பகுதிகளை கைப்பற்றியது யாருடைய போற்றத்தகுந்த சாதனையாகும்?
A
ஹரிஹரர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 14
ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர்களைத் தோற்கடித்தவர் _________.
A
ஹரிஹரர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 15
தம்மிடம் பணி செய்வதற்காகவும் தம்முடைய படைகளுக்கு நவீனப்போர் முறைகளில் பயிற்சி அளிப்பதற்காகவும் இஸ்லாமிய வீரர்களை தமது படையில் பணியமர்த்தும் முறையை தொடங்கிவைத்தவர்
A
நரசிம்மர்
B
இரண்டாம் ஹரிஹரர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 16
துக்ளக் அரசர்களிடம் பணி செய்து வந்த ஹரிஹரர், புக்கர் ஆகியோரை, அப்பணியை கைவிட்டு நாட்டை முஸ்லிமகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்குமாறு அறிவுறுத்தியவர்
A
விஜயாதித்யன்
B
விக்கிரமாதித்யன்
C
வித்யாரண்யர்
D
விக்கிரம சோழன்
Question 17
சங்கம வம்சத்தின் கடைசி அரசர் _________.
A
இரண்டாம் விருபாக்சி ராயர்
B
முதலாம் விருபாக்சி ராயர்
C
முதலாம் தேவராயர்
D
இரண்டாம் தேவராயர்
Question 18
துளுவ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்__________.
A
கிருஷ்ணதேவராயர்
B
நரசநாயக்கர்
C
பிரதாபருத்ரன்
D
விருபாக்சிராயர்
Question 19
துளுவ வம்ச அரசரான கிருஷ்ணதேவராயர் எத்தனை ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்?
A
5
B
15
C
20
D
25
Question 20
  • கூற்று 1: கிருஷ்ண தேவராயர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் துங்கபத்திரா நதிப் பள்ளத்தாக்கு பகுதியில் சுதந்திரமாக செயல்பட்டு வந்த தலைவர்களை அடக்குவதே அவரது முதற்கட்ட தலையாய பணியாக இருந்தது.
  • கூற்று 2: குல்பர்காவைக் கைப்பற்றுவது கிருஷ்ணதேவராயரின் இரண்டாவது இலக்காக அமைந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 21
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. கிருஷ்ணதேவராயர், ஒடிசாவைச் சேர்ந்த கஜபதி வம்ச அரசர் பிரதாபருத்திரனோடு போர் மேற்கொண்டார்.
  2. போர்த்துக்கீசியப் பீரங்கிப்படை வீரர்களின் உதவியோடு கோல்கொண்டா சுல்தானை கிருஷ்ணதேவராயர் எளிதாகத் தோற்கடித்தார்.
  3. பீஜப்பூர் சுல்தானிடமிருந்து ரெய்ச்சூரைக் கைப்பற்றினார்.
A
1, 3 தவறு
B
2 மட்டும் தவறு
C
2 மட்டும் தவறு
D
எதுவுமில்லை
Question 22
கீழ்க்கண்டவற்றுள் கிருஷ்ணதேவராயர் கட்டியக் கோவில்கள் எவை?
  1. கிருஷ்ணசாமி கோவில்
  2. ஹசாரா ராமசாமி கோவில்
  3. விட்டலாசுவாமி கோவில்
  4. கைலாசநாதர் கோவில்
A
1, 2
B
2, 3, 4
C
1, 2, 3
D
1, 3, 4
Question 23
  • கூற்று 1: கிருஷ்ணதேவராயர் போர்களின் மூலம் தாம் பெற்ற செல்வங்களை மிகப்பெரும் தென்னிந்தியக் கோவில்களுக்கு வழங்கி, அதன்மூலம் கோவில்களின் நுழைவாயில்களில் கோபுரங்களை நிறுவினார்.
  • கூற்று 2: கிருஷ்ணதேவராயருக்கு புகழை சேர்க்கும் வண்ணம் அக்கோபுரங்கள் தேவகோபுரம் என அழைக்கப்பட்டன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 24
  • கூற்று 1: கிருஷ்ணதேவராயர் அரேபியாவிலிருந்தும், ஈரானிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் குதிரைகளை இறக்குமதி செய்தார்.
  • கூற்று 2: போர்த்துக்கீசிய, அராபிய வணிகர்களுடன் கிருஷ்ணதேவராயர் சிறந்த நட்புறவை கொண்டிருந்தார்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 25
அஷ்டதிக்கஜங்கள் என்றறியப்பட்ட எட்டு இலக்கிய மேதைகள் யாருடைய அவையை அலங்கரித்தனர்?
A
கிருஷ்ணதேவராயர்
B
நரசநாயக்கர்
C
பிரதாபருத்ரன்
D
விருபாக்சிராயர்
Question 26
அஷ்டதிக்கஜங்களில் மகத்தானவர் என்றறியப்படுபவர்___________.
A
தெனாலிராமன்
B
அல்லசானி பெத்தண்ணா
C
நந்தி திம்மண்ணா
D
ராமகிருஷ்ணன்
Question 27
சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் - சதாசிவராயர் - முதலாம் வேங்கடர் - அச்சுதராயர்
B
கிருஷ்ணதேவராயர் - நரசநாயக்கர் - அச்சுதராயர் - சதாசிவராயர் - முதலாம் வேங்கடர்
C
நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் – அச்சுதராயர் - முதலாம் வேங்கடர் – சதாசிவராயர்
D
நரசநாயக்கர் - கிருஷ்ணதேவராயர் - முதலாம் வேங்கடர் – அச்சுதராயர் – சதாசிவராயர்
Question 28
ராக்சச தங்கடி என்றறியப்பட்ட போர் எது?
A
சந்தேரிப் போர்
B
செளசா போர்
C
தலைக்கோட்டைப் போர்
D
பக்சார் போர்
Question 29
கிழக்கு கர்நாடகத்தில், ___________ நதியின் கரையில் உள்ள விஜயநகரம் இருந்த இடம் தற்போது ஹம்பி என அழைக்கப்படுகிறது.
A
கிருஷ்ணா
B
கோதாவரி
C
துங்கபத்ரா
D
யமுனை
Question 30
ஆரவீடு வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கியவர் _________.
A
ராமராயர்
B
சதாசிவராயர்
C
நரசநாயக்கர்
D
திருமலைதேவராயர்
Question 31
ஆரவீடு வம்சத்தார் _________ல் புதிய தலைநகரை உருவாக்கிப் பேரரசை சிலகாலம் நல்ல நிலையில் வைத்திருந்தனர்.
A
சந்திரகிரி
B
பெனுகொண்டா
C
கோல்கொண்டா
D
உதயகிரி
Question 32
விஜயநகர அரசு ________ ஆண்டு வீழ்ச்சியுற்றது.
A
1636
B
1646
C
1656
D
1676
Question 33
  • கூற்று 1: விஜயநகர நிர்வாகத்தில் அரச பதவி பரம்பரையானதாக இருந்தது.
  • கூற்று 2: அரச பதவியேற்றவர் வயதில் சிறியவராக இருந்தால், நிர்வாகப் பணிகளைக் கவனிப்பதற்காகப் பகர ஆளுநரை நியமனம் செய்யும் முறை நடைமுறையில் இருந்தது.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 34
விஜயநகர நிர்வாகம் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
ஒவ்வொரு மண்டலமும் மண்டலேஸ்வரா என்ற ஆளுநரின் கீழிருந்தது.
B
கிராமமே நிர்வாகத்தின் மிகச்சிறிய அலகாக இருந்தது.
C
ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபை என்ற அமைப்பிருந்தது.
D
விஜயநகரப் படைகள் வெடிமருந்து ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை.
Question 35
விஜயநகரப் பேரரசில் கிராமம் தொடர்பான விடயங்களை _________ என்றழைக்கப்பட்ட கிராமத் தலைவர் நிர்வகித்தார்.
A
கிராமணி
B
கேடா
C
கெளடா
D
கிராமி
Question 36
விஜயநகர பேரரசர்கள் __________ என்னும் பெயரில் அதிக எண்ணிக்கையிலான தங்க நாணயங்களை வெளியிட்டனர்.
A
டங்கா
B
ருபியா
C
வராகன்
D
ருபே
Question 37
விஜயநகரப் பேரரசில் போர்த்துகீசியக் கட்டுமானக் கலைஞர்களின் உதவியுடன் மிகப்பெரும் ஏரி கட்டப்பட்டதாக__________ என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
A
அல்புகர்க்
B
அல்பருனி
C
யுவான்சுவாங்
D
அப்துர்ரஸாக்
Question 38
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
  1. விஜயநகரப் பேரரசில் அரசுக்கு அடுத்தபடியாக வேளாண்மையை முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்டு நிலச்சுவான்தார்கள் கோவில்களிலும், நீர்ப்பாசனத்திலும் முதலீடு செய்தனர்.
  2. ஏரியிலிருந்து நகரின் பல பகுதிகளுக்கு ஏரி நீரைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாகக் கால்வாய்கள் கட்டப்பட்டன.
  3. நகரத்தில் பல்வகைப்பட்ட வேளாண் பண்டங்கள் பெருமளவில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2, 3 சரி
D
1, 3 சரி
Question 39
விஜயநகர அரசமைப்பின் சரியான வரிசையைத் தேர்ந்தெடு.
A
பேரரசு – மண்டலங்கள் – ஸ்தலங்கள் - நாடுகள் - கிராமங்கள்
B
பேரரசு – ஸ்தலங்கள் – மண்டலங்கள் - நாடுகள் – கிராமங்கள்
C
பேரரசு – மண்டலங்கள் - நாடுகள் – ஸ்தலங்கள் – கிராமங்கள்
D
பேரரசு - ஸ்தலங்கள் - நாடுகள் – மண்டலங்கள் – கிராமங்கள்
Question 40
விஜயநகரப் பேரரசில் ___________ என்றழைக்கப்படும் தொழில்சார் அமைப்புகள் கைவினை, குடிசைத்தொழில்களை முறைப்படுத்தின.
A
காரட்டுகள்
B
கில்டுகள்
C
நியாயதர்ஷா
D
குரோம்கள்
Question 41
விஜயநகரப் பேரரசில் கைவினைஞர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தனித்தனியே கில்டுகள் இருந்ததாக ___________ குறிப்பிட்டுள்ளார்.
A
அல்புகர்க்
B
அல்பருனி
C
யுவான்சுவாங்
D
அப்துர்ரஸாக்
Question 42
கீழ்க்கண்ட எந்த நாடுகளுடன் விஜயநகரம் வாணிகம் மேற்கொண்டது?
  1. பாரசீகம்
  2. தென்னாப்பிரிக்கா
  3. போர்த்துகல்
  4. அரேபியா
  5. சீனா
  6. இலங்கை
A
அனைத்தும்
B
1, 3, 4, 5
C
1, 3, 4, 5, 6
D
1, 2, 4, 5
Question 43
விஜயநகர அரசர்களின் ஆதரவினால் கீழ்க்கண்ட எந்த மொழிகளில் நூல்கள் எழுதப்பட்டன?
  1. சமஸ்கிருதம்
  2. தெலுங்கு
  3. மலையாளம்
  4. கன்னடம்
  5. தமிழ்
A
1, 2, 4
B
1, 2, 3, 5
C
1, 2, 4, 5
D
1, 2, 5
Question 44
கிருஷ்ணதேவராயர் அமுக்தமால்யதா என்னும் காவியத்தை _________மொழியில் இயற்றினார்.
A
கன்னடம்
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
தெலுங்கு
Question 45
  • கூற்று 1: அமுக்தமால்யதா, பெரியாழ்வாரின் மகளான கோதை தேவியைப் பற்றியதாகும்.
  • கூற்று 2: அமுக்தமால்யதா என்பதற்கு தான் அணிந்த பின்னர் கொடுப்பவர் எனப் பொருள்
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 46
கிருஷ்ணதேவராயர் ஜாம்பவதி கல்யாணம் என்னும் நாடக நூலை _________மொழியில் எழுதினார்.
A
கன்னடம்
B
தமிழ்
C
சமஸ்கிருதம்
D
தெலுங்கு
Question 47
பாண்டுரங்கமகாத்தியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
A
ஸ்ரீநாதர்
B
பெத்தண்ணா
C
துக்கண்ணா
D
தெனாலி ராமகிருஷ்ணா
Question 48
  • கூற்று 1: பெரும் எண்ணிக்கையிலான வடிவத்தில் பெரிய தூண்களும் அவற்றில் இடம்பெற்றுள்ள சிற்ப, செதுக்கல் வேலைப்பாடுகளும் விஜயநகரப் பாணியின் தனித்துவ அடையாளங்களாகத் திகழ்ந்தன.
  • கூற்று 2: விஜயநகரப் பாணி தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விலங்குகளில் யானைகள் அதிகம் இடம் பெற்றுள்ளன.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 49
எந்த ஆண்டு அலாவுதீன் ஹசன் தெளலதாபாத் நகரைக் கைப்பற்றி, பாமன்ஷா என்ற பெயரில் தம்மையே சுல்தானாக அறிவித்துக்கொண்டார்?
A
1437
B
1374
C
1347
D
1357
Question 50
அலாவுதீன் ஹசன் பாமன் ஷா தமது தலைநகரை எங்கு மாற்றினார்?
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 51
ஹசன் கங்கின் காலத்திற்கு பிறகு பாமினி அரசின் தலைநகர் மீண்டும் பீடாருக்கு மாற்றப்பட்ட ஆண்டு
A
1419
B
1429
C
1439
D
1459
Question 52
பாமினி வம்சத்தில் மொத்தம் எத்தனை அரசர்கள் இடம்பெற்றுள்ளனர்?
A
15
B
16
C
17
D
18
Question 53
அலாவுதீன் ஹசன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்?
A
8
B
9
C
11
D
13
Question 54
அலாவுதீன் ஹசன் பாமன்ஷா தமது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்?
A
2
B
3
C
4
D
5
Question 55
  • கூற்று 1: பாமினி அரசில் ஒவ்வொரு மாகாண ஆளுநரும் படைகளுக்கு தலைமை ஏற்றனர்.
  • கூற்று 2: மாகாணங்களை நிர்வாகம் செய்வதும், வரிவசூல் செய்வதும் ஆளுநருடைய பொறுப்பாகும்.
A
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
B
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
C
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி
D
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு
Question 56
முதலாம் முகமது ஷா ____________ ஆண்டு வாரங்கல் அரசோடு போரிட்டார்.
A
1365
B
1367
C
1368
D
1369
Question 57
"பச்சை கலந்த நீலவண்ணக் கல்லானது விலையுயர்ந்த அணிகலன்களில் பயன்படுத்தப்படும் கல்லாகும். பாரசீக அரசர்களின் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனங்களில் இத்தகைய வண்ணக்கல்லால் ஆன அரியணையும் ஒன்றாகுமென " யாருடைய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
A
அல்பரூனி
B
தெனாலிராமன்
C
அப்துர்ரஸாக்
D
பிர்தெளசி
Question 58
கோல்கொண்டா கோட்டை குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
A
கோல்கொண்டா கோட்டையானது ஹைதராபாத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், ஒரு குன்றின் மீது 210 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
B
ஒலி தொடர்பான கட்டடக்கலை அம்சங்களுக்கு இக்கோட்டை பெயர் பெற்றதாகும்.
C
கோட்டையின் மிக உயரமான இடம் பால ஹிசார் ஆகும்.
D
தர்பார் மண்டபத்திலிருந்து குன்றின் கீழே அமைந்துள்ள அரண்மனைக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Question 59
பாமினி அரசிற்கு வலுவான ஓர் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர்
A
அலாவுதீன் ஹசன்
B
முதலாம் முகமது ஷா
C
இரண்டாம் முகமது
D
மூன்றாம் முகமது
Question 60
முதலாம் முகமது ஷா __________ல் இரண்டு மசூதிகளைக் கட்டினார்.
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 61
முதலாம் முகமது ஷாவால் கட்டப்பட்ட இரண்டு மசூதிகளில், முதல் மசூதி _________ ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
A
1352
B
1362
C
1367
D
1369
Question 62
இரண்டாம் முகமது _________ ஆண்டு அரியணை ஏறினார்.
A
1358
B
1362
C
1374
D
1378
Question 63
இரண்டாம் முகமதுவின் ஆட்சிக்கு பின் _________ ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், குறிப்பிட்டுச் சொல்லும்படியான அரசராக மூன்றாம் முகமது திகழ்ந்தார்.
A
65
B
75
C
85
D
95
Question 64
மூன்றாம் முகமதுவின் காலக்கட்டத்தில் அரசின் பிரதம அமைச்சராகவும் குறிப்பிடத்தகுந்த ஆளுமையாகவும் விளங்கியவர்__________.
A
பிர்தெளசி
B
அல்பருனி
C
தெனாலிராமன்
D
மகமது கவான்
Question 65
தவறான இணையைத் தேர்ந்தெடு. (பாமினி அரசின் எட்டு அமைச்சர்கள்)
A
நஷீர் : உதவி நிதியமைச்சர்
B
வஷிர் – இ – அசாரப் : வெளியுறவுத்துறை அமைச்சர்
C
கொத்தவால் - காவல்துறைத் தலைவர் மற்றும் நகர குற்றவியல் நடுவர்
D
சதார் – இ – ஜகான் : தலைமை படைத்தளபதி
Question 66
மகமது கவான் குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
  1. கவான் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் நிர்வாகச் சீர்திருத்தங்களுக்கும் பெயர் பெற்றவராவர்.
  2. மாகாண ஆளுநர்களைக் கட்டுப்படுத்தவும், நிர்வாகத்தைக் கட்டுக்கோப்புடையதாக மாற்றவும் பாமினி அரசில் ஏற்கனவே இருந்த நான்கு மாகாணங்களை எட்டாக மாற்றினார்.
  3. மாகாண ஆளுநர்களின் இராணுவ வலிமையைக் கட்டுக்குள் வைப்பதற்காக ஒவ்வோர் ஆளுநரும் ஒரு கோட்டையை மட்டும் தங்கள் வசம் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஏனைய கோட்டைகளைச் சுல்தான் தமது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொண்டார்.
A
1 மட்டும் தவறு
B
2 மட்டும் தவறு
C
1, 2 தவறு
D
எதுவுமில்லை
Question 67
மூன்றாம் முகமதுவின் இறப்பிற்கு பின்னர் ___________ என்பவர் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.
A
பிரோஸ்
B
சிகாபுதீன் முகமது
C
அகமதுகான்
D
அப்துல்லா
Question 68
மூன்றாம் முகமதுவின் இறப்பிற்கு பின்னர் ___________ என்பவர் சுல்தானாக ஆட்சி புரிந்தார்.
A
பிரோஸ்
B
சிகாபுதீன் முகமது
C
அகமதுகான்
D
அப்துல்லா
Question 69
சிகாபுதீன் முகமதுவிற்கு பின் பதவியேற்ற __________ சுல்தான்களும் திறமைக் குன்றியவர்களாகப் பெயரளவிற்கே அரியணையில் இருந்தனர்.
A
3
B
4
C
5
D
6
Question 70
பாமினிய சுல்தானியம் படிப்படியாக __________ சுதந்திரமான தக்காண சுல்தானியங்களாகச் சிதைந்தது.
A
3
B
4
C
5
D
5
Question 71
கட்டடக்கலைக்குப் பாமினி சுல்தான்கள் ஆற்றிய பங்களிப்பைக் எந்த இடத்தில் காணலாம்?
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Question 72
பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் ஹசன் ஷா,________ன் படைத் தளபதிகளில் ஒருவரான ஜாபர்கான் என்பவரின் முயற்சியால் முல்தானில் கல்வி கற்றார்.
A
குத்புதின் ஐபக்
B
முகமது பின் துக்ளக்
C
அலாவுதீன் கில்ஜி
D
பால்பன்
Question 73
சுல்தான் பிரோஸ் பாமினி அரசின் எத்தனையாவது சுல்தான் ஆவார்?
A
6
B
7
C
8
D
9
Question 74
சுல்தான் பிரோசிற்கு பின் வந்த அரசர்கள் கீழ்க்கண்ட எந்த இடங்களில் கல்விக் கூடங்களை நிறுவினர்?
  1. குல்பர்கா
  2. பீடார்
  3. தெளலதாபாத்
  4. காண்டகார்
A
அனைத்தும்
B
1, 2, 4
C
1, 2, 3
D
2, 3, 4
Question 75
மகமது கவானின் மதரசா (கல்வி நிலையம்) எங்கு அமைந்துள்ளது?
A
பீடார்
B
தெளலதாபாத்
C
குல்பர்கா
D
டெல்லி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.Get Results
There are 75 questions to complete.